பிசிபி தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜா நீக்கம்?

Updated: Sun, Dec 18 2022 11:53 IST
Ramiz Raja Could Be Removed As Pakistan Cricket Board Chief After Test Defeats against England: Repo (Image Source: Google)

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த இசான் அணியின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அவரது பதவிக்காலத்தை நீட்டிக்க அப்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய புரவலரும், பிரதமருமான இம்ரான் கான் விரும்பவில்லை.

இதனனையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய புதிய தலைவராக முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான ரமீஸ் ராஜா நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ரமீஸ் ராஜா பிசிபி தலைவராக செயல்பட்டு வருகிறார்.

பிசிபி தலைவராக ரமீஸ் ராஜா 3 ஆண்டுகள் செயல்படுவார் என்று கூறப்பட்ட நிலையில், திடீரென ரமீஸ் ராஜா நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரான நஜாம் சேதி நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் நஜான் சேதி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் உடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.

இதனால் பிசிபி தலைவர் பதவியில் இருந்து ரமீஸ் ராஜா விரைவில் நீக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 2017ம் ஆண்டு பிசிபி தலைவராக நஜாம் சேதி நியமிக்கப்பட்ட நிலையில், இம்ரான் கானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2018ம் ஆண்டு பதவிநீக்கம் செய்யப்பட்டார். அதேபோல் 2013 - 2014 ஆகிய ஆண்டுகளில் நஜாம் சேதி பிசிபி தலைவராக பணியாற்றியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் தலைவர் பதவியில் மாற்றம் வரப் போவதாக தகவல் வெளியாகியது. இதுகுறித்து பிசிபி தலைவர் ரமீஸ் ராஜாவ்டம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “பிசிபி தலைவர் பதவி மாற்றம் என்று பரவும் தகவல்கள் வதந்தி மட்டுமே. இப்போதைக்கு, இந்தப் பதிவியில் இருந்து நீக்கம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை” என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு முதல் பாகிஸ்தானுக்கு வெளிநாட்டு அணிகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தது. இந்தநிலையில் பிசிபி நிர்வாக பிரச்சினையால் மீண்டும் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு பாதிப்பு வருமோ என்று ரசிகர்கள் குழம்பியுள்ளனர். அதேபோல் கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு அதிகம் இருப்பதால், உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிக பிரச்சினை எழுவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை