இந்தியா - பாகிஸ்தான் போட்டி; ரமீஸ் ராஜா முயற்சி!

Updated: Tue, Jan 11 2022 17:05 IST
Ramiz Raja Set To Propose Quadrangular Series Including India (Image Source: Google)

அரசியல் சூழல் காரணமாக கடந்த 2012-13க்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில்லை. ஐசிசி, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் போட்டிகளில் மட்டுமே இரு நாடுகளும் மோதுகின்றன. இந்த நிலையை மாற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா முயற்சி எடுத்து வருகிறார். 

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் 36ஆவது தலைவராக ரமீஸ் ராஜா கடந்த வருடம் நியமிக்கப்பட்டார். இதற்கு முன்பு வாரியத்தில் 2003-04-ல் தலைமை அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார். 2004இல் இந்தியா பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்ததற்கு ரமீஸ் ராஜா முக்கியப் பங்கு வகித்தார். 

இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என நான்கு நாடுகளும் பங்கேற்கும் டி20 போட்டியை நடத்த ரமீஸ் ராஜா திட்டமிட்டு இதுபற்றி ஐசிசி கூட்டத்தில் விவாதிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்தப் போட்டியை ஒவ்வொரு வருடமும் நடத்துவதன் மூலம் இந்தியாவும் பாகிஸ்தானும் சர்வதேச போட்டிகளில் அடிக்கடி மோதும் நிலைமை உருவாகும், இதன் வழியாக அதிக வருமானமும் கிடைக்கும் என்பதால் இதற்கான ஏற்பாடுகளை ரமீஸ் ராஜா செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை