பிஎஸ்எல் 2021: நடப்பு சாம்பியனை வீழ்த்தி தகுதிச்சுற்றுக்கு முன்னேறிய ஸால்மி!
பிஎஸ்எல் தொடரின் 6ஆவது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் நடப்பு சாம்பியன் கராச்சி கிங்ஸ் அணி, பெஸ்வர் ஸால்மி அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பெஸ்வர் ஸால்மி முதலில் கராச்சி கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியிக்கு ஷர்ஜில் கான் - பாபர் அசாம் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் பாபர் அசாம் அரைசதம் கடந்தார்.
இறுதியில் திசாரா பெரேரா சில பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் கராச்சி கிங்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பாபர் அசாம் 53 ரன்களையும், திசாரா பெரேரா 37 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பெஸ்வர் ஸால்மி அணிக்கு ஹஸ்ரதுல்லா ஸஸாய் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அரைசதம் கடந்தார். அவருடன் இணைந்த சோபிப் மாலிக் தனது பங்கிற்கு 30 ரன்களைச் சேர்த்தார்.
இதன் மூலம் 19.5 ஓவர்களில் பெஸ்வர் ஸால்மி அணி வெற்றி இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் கராச்சி கிங்ஸ் அணியை வீழ்த்தியது.
இதன் மூலம் பெஸ்வர் ஸால்மி அணி பிஎஸ்எல் தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டி முன்னேறியது.