ரஞ்சி கோப்பை 2022 : காலிறுதிச்சுற்று ஆட்டம் (இரண்டாம் நாள்)
இந்தியாவின் பழைமையான கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் கடந்தாண்டு தொடங்கியது. இந்நிலையில் இத்தொடரில் லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், காலிறுதி சுற்று ஆட்டங்கள் ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதில் காலிறுதிக்கு பெங்கால், ஜார்கண்ட், மும்பை, கர்நாடகா, உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், பஞ்சாப், உத்ராகாண்ட் ஆகிய எட்டு அணிகள் முன்னேறின.
பெங்கால் vs ஜார்கண்ட்
அதன்படி நேற்று தொடங்கிய முதல் காலிறுதி போட்டிகள் பெங்கால் - ஜார்கண்ட் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற்ய் முதலில் பேட்டிங் செய்த ஜார்கண்ட் அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் பெங்கால் அணி ஒரு விக்கெட்டுகள் இழப்பிற்கு 310 ரன்களைச் சேர்த்து வலிமையான நிலையில் இருந்தது.
இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் சுதிப் குமார் கார்மி 106 ரன்களையும், அனுஸ்டர் மஜும்தார் 85 ரன்களுடனும் தொடர்ந்தனர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய கார்மி 187 ரன்களில் ஆட்டமிழந்து இரட்டை சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
மறுமுனையில் அபாரமாக விளையாடிய மஜும்தார் சதமடித்ததுடன், 117 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஜார்கண்ட் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 577 ரன்களைச் சேர்த்துள்ளது.
மும்பை vs உத்திராகாண்ட்
இரண்டாவது காலிறுதிப்போட்டியில் மும்பை - உத்திராகாண்ட் அணிகள் மோதின. முதல்நாள் ஆட்டநேர முடிவில் மும்பை அணி 304 ரன்களைச் சேர்த்திருந்தது.
இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய ஸ்வித் பார்க்கர் தனது அறிமுக ஆட்டத்திலேயே இரட்டை சதமடித்து அசத்தினார். தொடர்ந்து அபாரமாக விளையாடி பார்க்கர் 253 ரன்களையும், அனுபவ வீரர் சர்ஃப்ராஸ் கான் 153 ரன்களையும் சேர்த்தனர்.
அதன்பின் 647 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மும்பை அணி டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய உத்திராகாண்ட் அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 39 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது.
கர்நாடகா vs உத்திரபிரதேசம்
மூன்றாவது காலிறுதிப்போட்டியில் கர்நாடகா - உத்திரபிரதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற உபி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய கர்நாடகா அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களை மட்டுமே சேர்த்து தடுமாறியது.
அதன்பின் இரண்டாம் நாளின் தொடக்கத்திலேயே கர்நாடக அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 253 ரன்களை மட்டுமே சேர்த்தது. பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய உத்திரபிரதேச அணி 155 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால் 97 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்ஸைத் தொடங்கிய கர்நாடக அணி ஆரம்பம் முதலே சீராண வேகத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் கர்நாடக அணி 8 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.
பஞ்சாப் - மத்திய பிரதேசம்
நான்காவது காலிறுதி ஆட்டத்தில் பஞ்சாப் மற்றும் மத்திய பிரதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்று பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து 219 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய மத்திய பிரதேசம் அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 ரன்களை எடுத்த நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.
இதில் ஹிமன்ஷு மண்ட்ரி 89 ரன்களில் ஆட்டமிழக்க மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுபம் சர்மா சதமடித்து அசத்தினார்.
இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் மத்தியபிரதேச அணி 238 ரன்களைச் சேர்த்துள்ளது.