ரஞ்சி கோப்பை குறித்து ரவி சாஸ்திரி கருத்து!

Updated: Fri, Jan 28 2022 13:59 IST
Image Source: Google

இந்தியாவில் கரோனா பரவல் தொடங்கியவுடன் இன்று வரை ரஞ்சி கோப்பைப் போட்டிகள் நடைபெறவில்லை. இதனால் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது பிசிசிஐ. எனினும் இம்முறை ரஞ்சி கோப்பைப் போட்டியை நடத்த உறுதியாக உள்ளது பிசிசிஐ. 

இந்த வருடம் ரஞ்சி கோப்பைப் போட்டியை இரு பகுதிகளாக நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. முதல் பகுதியில் லீக் ஆட்டங்களை நடத்திவிடுவோம். நாக் அவுட் ஆட்டங்கள் ஜுனில் நடைபெறும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார்.

இந்நிலையில் ரஞ்சி கோப்பைப் போட்டி தொடர்பாகத் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. 

இதுகுறித்து பேசிய அவர், “இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பாக உள்ளது ரஞ்சி கோப்பைப் போட்டி. அதை நாம் உதாசீனப்படுத்த ஆரம்பிக்கும்போது இந்திய கிரிக்கெட் முதுகெலும்பில்லாததாக ஆகிவிடும்” எனக் கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை