ரஞ்சி கோப்பை 2022: காலிறுதிச்சுற்று!

Updated: Mon, Jun 06 2022 22:42 IST
Image Source: Google

இந்தியாவின் பழைமையான கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் கடந்தாண்டு தொடங்கியது. இந்நிலையில் இத்தொடரில் லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், காலிறுதி சுற்று ஆட்டங்கள் ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதில் காலிறுதிக்கு பெங்கால், ஜார்கண்ட், மும்பை, கர்நாடகா, உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், பஞ்சாப், உத்ராகாண்ட் ஆகிய எட்டு அணிகள் முன்னேறின.

பெங்கால் vs ஜார்கண்ட்

அதன்படி இன்று தொடங்கிய முதல் காலிறுதி போட்டிகள் பெங்கால் - ஜார்கண்ட் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜார்கண்ட் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய பெங்கால் அணியில் சுதிப் குமார் கார்மி சதமடித்து அசத்தினார். இதன்மூலம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் பெங்கால் அணி ஒரு விக்கெட்டுகள் இழப்பிற்கு 310 ரன்களைச் சேர்த்து வலிமையான நிலையில் உள்ளது.

பெங்கால் அணி தரப்பில் சுதிப் குமார் கார்மி 106 ரன்களையும், அனுஸ்டர் மஜும்தார் 85 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். பெங்கால் அணி தரப்பில் சுஷாந்த் மிஸ்ரா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

மும்பை vs உத்திராகாண்ட்

இரண்டாவது காலிறுதிப்போட்டியில் மும்பை - உத்திராகாண்ட் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.

அந்த அணியில் பிரித்வி ஷா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ஸ்வித் பார்க்கர் சதமடித்து அசத்தினார்.

இதன்மூலம் மும்பை அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் மும்பை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஸ்வித் பார்க்கர் 104 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

கர்நாடகா vs உத்திரபிரதேசம்

மூன்றாவது காலிறுதிப்போட்டியில் கர்நாடகா - உத்திரபிரதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற உபி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய கர்நாடகா அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களை மட்டுமே சேர்த்து தடுமாறி வருகிறது.

உத்திரபிரதேசம் அணி தரப்பில் சௌரப் குமார் 4 விக்கெட்டுகளையும், ஷிவம் மாவி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

பஞ்சாப் - மத்திய பிரதேசம்

நான்காவது காலிறுதி ஆட்டத்தில் பஞ்சாப் மற்றும் மத்திய பிரதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.

அதன்படி களமிறங்கிய அந்த அணி 219 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா, அன்மோல்ப்ரீத் சிங் தலா 47 ரன்களைச் சேர்த்தனர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய மத்திய பிரதேசம் அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் எடுத்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை