இந்தியாவை காட்டிலும் பாகிஸ்தான் தான் சிறப்பாக உள்ளது - ரஷீத் லத்தீஃப்!

Updated: Fri, Jun 24 2022 13:02 IST
Image Source: Google

இந்திய அணி சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளைப் பெற்றதால் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி போட்டி மழைக் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. 

இதன் காரணமாக இத்தொடர் சமனில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டு, இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டது. இதையடுத்து இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளட்ட்து. 

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியை காட்டிலும் பாகிஸ்தான் அணி தான் தற்போது சிறப்பாக உள்ளது, என்று முன்னாள் பாகிஸ்தான் விக்கெட் கீப்பரான ரஷீத் லத்தீஃப் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய ரஷீத் லத்தீஃப், “இந்திய கிரிக்கெட் அணி தொடர்பாக என்னிடம் யாராவது கேட்டால், நிச்சயம் அது ஒரு நல்ல அணி என்று தான் கூறுவேன். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால், பாகிஸ்தான் அணி தற்போது இருக்கும் ஃபார்முடன், இந்திய அணியை மட்டுமல்ல வேறு எந்த அணியையும் ஒப்பிட முடியாது. 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் ஷாஹின் ஷா அஃப்ரிடி, பாபர் ஆசம், முகமது ரிஸ்வான் ஆகிய நிகரற்ற வீரர்கள் உள்ளனர். இவர்களை மிகச்சிறந்த வீரர்களாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலே (ஐசிசி) அங்கீகரித்துள்ளது.

எதிர்வரும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நிச்சயமாக பலத்த போட்டிகள் இருக்கும். ஆனால் பிரதான போட்டி என்பது இந்தியா - பாகிஸ்தான் இடையேதான் இருக்கும். கடந்த ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவை தோற்கடித்ததால் பாகிஸ்தான் அணி மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது. எனவே, ஆசியக் கோப்பையை பாகிஸ்தான் கைப்பற்றும் என உறுதியாக நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை