IND vs AFG: நஜிபுல்லா ஸத்ரான் தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!

Updated: Sat, Jan 06 2024 19:02 IST
IND vs AFG: நஜிபுல்லா ஸத்ரான் தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு! (Image Source: Google)

இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் வரும் 11ஆம் தேதி தொடங்குகிறது. டி20 உலக கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது. இந்த தொடருக்கு முன்பு கடைசியாக இந்தியா விளையாடும் ஒரே தொடர் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்திய அணி நேற்று அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆஃப்கானிஸ்தான் அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த அணியில் உள்ள சீனியர் வீரர்களுக்கும் கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் நவீன் உல் ஹக், முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அணியில் அனைவருமே இடம் பிடித்திருக்கிறார்கள். அனுபவ வீரர் இப்ராஹிம் சாரன் இந்த தொடரில் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹஸ்மதுல்லா ஷாஹிதி இந்த தொடரில் சாதாரண வீரராக தான் விளையாடுகிறார். 

மேலும் இப்ராஹிம் ஸத்ரான் தலைமையிலான இந்த அணியில் ரஹ்மனுல்லா குர்பாஸ், ஹஸ்ரதுல்லா ஸஸாய், ரஷித் கான், முகமது நபி போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அனுபவமும் இளம் வீரர்களும் கலந்த கலவையாக இந்த அணி உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணி தற்போது கத்துக்குட்டி போல் இல்லாமல் பலம் வாய்ந்த அணிகளுக்கே தண்ணி காட்டுகிறது. இதனால் இந்திய வீரர்கள் இந்த தொடரை சாதாரணமாக நினைத்து விடக்கூடாது.

இத்தொடரின் முதல் டி20 போட்டி வரும் 11ஆம் தேதி மொகாலியிலும், இரண்டாவது t20 போட்டி வரும் 14ஆம் தேதி இந்தூரிலும், மூன்றாவது டி20 போட்டி வரும் 17ஆம் தேதி பெங்களூருவிலும் நடைபெறுகிறது. இந்த போட்டிகள் அனைத்தும் இரவு ஏழு மணிக்கு இந்திய நேரப்படி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆஃப்கானிஸ்தான் அணி: இப்ராஹிம் சத்ரான் (கே), ரஹ்மானுல்லா குர்பாஸ், இக்ராம் அலிகில், ஹஸ்ரத்துல்லா ஸஸாய், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஸத்ரான், முகமது நபி, கரீம் ஜனத், அஸ்மத்துல்லா உமர்சாய், ஷரபுதீன் அஷ்ரஃப், முஜீப் உர் ரஹ்மான், ஃபசல்ஹக் ஃபரூக்கி, ஃபரீத் அஹ்மத், நவீன் உல் ஹக், நூர் அகமது, முகமது சலீம், கைஸ் அஹ்மத், குல்பதின் நைப், ரஷித் கான்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை