கரோனா பாதிப்பு குறித்து மௌனம் கலைத்த ரவி சாஸ்திரி!

Updated: Sun, Sep 12 2021 18:48 IST
Ravi Shastri Breaks Silence After Facing Backlash For Going To Book Launch (Image Source: Google)

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் 4 போட்டிகள் முடிவில் 2-1 என இந்திய அணி முன்னிலை வகித்த நிலையில், கரோனா அச்சுறுத்தலால் கடைசி டெஸ்ட் ரத்தானது.

4ஆவது டெஸ்ட் போட்டி நடந்துகொண்டிருந்தபோது, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் மற்றும் ஃபிசியோ நிதின் படேல் ஆகிய நால்வருக்கும் கரோனா உறுதியானது. அதனால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

லண்டனில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் ரவி சாஸ்திரி, பரத் அருண், ஸ்ரீதர் ஆகிய பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன் கோலி உள்ளிட்ட சில வீரர்கள் கலந்துகொண்டதுதான் கரோனா பரவலுக்கு காரணம் என்று கூறப்பட்டது. 

கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய அணியை சேர்ந்த மேலும் சிலருக்கு கரோனா உறுதியானதையடுத்து, கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டதால் தான் இந்திய அணியில் கொரோனா பரவியது என்று கூறப்பட்ட நிலையில், அதுகுறித்து பேசியுள்ள ரவி சாஸ்திரி, “ஒட்டுமொத்த இங்கிலாந்தும் திறந்துதான் இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியிலிருந்தே எது வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். கரோனா பெருந்தொற்று காலத்தில் இந்திய அணி மட்டும்தான் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. இங்கிருக்கும் எக்ஸ்பர்ட்டுகளிடம் கேளுங்கள்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை