மீண்டும் வர்ணனையில் களமிறங்கும் ரவி சாஸ்திரி!

Updated: Thu, Dec 23 2021 21:48 IST
Ravi Shastri Comeback to Commentary on Cards (Image Source: Google)

இந்திய அணியில் முன்னாள் பயிற்சியாளரான ரவிசாஸ்திரி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றினார். அவரது பயிற்சி காலத்தில் இந்திய அணி மிக சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும் ஐசிசி தொடரை வெல்லவில்லை என்று குறை மட்டுமே உள்ளது.
 
அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடருக்கு பின்னர் தனது பதவிக்காலம் முடிவுக்கு வந்ததால் ரவிசாஸ்திரி பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். அவரை தொடர்ந்து தற்போது மற்றொரு இந்திய முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

ரவி சாஸ்திரியின் பயிற்சி காலத்தில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் நம்பர் ஒன் இடத்திற்கும் சென்றது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி அயல்நாட்டு மண்ணில் வெற்றிகளைக் குவித்தது. குறிப்பாக ஆஸ்திரேலியா மண்ணில் இருமுறை டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. அதோடு வெளிநாடுகளுக்கு எங்கு சென்றாலும் வெற்றியினை பதித்தது. இப்படி ஒரு சிறப்பான பயிற்சியாளராக செயல்பட்ட ரவிசாஸ்திரியால் ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியவில்லை என்பது வருத்தம் தான்.

இந்நிலையில் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய ரவிசாஸ்திரி அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் தற்போது அவர் மீண்டும் தனது பழைய வேலைக்கு திரும்பியுள்ளார். அதாவது வர்ணனையாளராக செயல்படவுள்ளார் என்று தெரிகிறது. 

அப்படி அவர் வர்ணனையாளராக திரும்பும் பட்சத்தில் ரசிகர்களுக்கு அது மிகப்பெரிய நற்செய்தியாக மாறும். ஏனெனில் அந்த அளவிற்கு வர்ணனையில் தனது வாய் ஜாலம் மூலம் அசத்த கூடியவர் ரவி சாஸ்திரி என்பது நாம் அறிந்ததே.

கடந்த சில நாட்களாகவே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவன சேனல்களில் ரவி சாஸ்திரி நடித்துள்ள விளம்பரம் அதிகம் ஒளிபரப்பாகி வருகிறது. அப்படி வெளியான அந்த விளம்பரத்தில் அவர் சமைத்துக் கொண்டிருக்கும் படி பேசும் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த விடீயோவின் மூலம் அவர் மீண்டும் ஸ்டார்ஸ் போர்ட்ஸ் நிறுவனத்தில் வர்ணனையாளராக மாறப்போகிறார் என்பது தெரியவந்ததுள்ளது. அதுவும் இந்த இந்தியா-தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரிலேயே நடக்கப்போவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை