என். சீனிவாசனுக்கு நன்றி தெரிவித்த ரவி சாஸ்திரி!

Updated: Tue, Nov 09 2021 19:26 IST
Ravi Shastri thanks N Srinivasan for India coaching job (Image Source: Google)

இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம் உலகக் கோப்பையுடன் முடிவடைந்துள்ளது. இதையடுத்து இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். அதன்பிறகு ஆஸ்திரேலியாவில் இருமுறை டெஸ்ட் தொடர்களை வென்று சாதனை படைத்தது இந்திய அணி. இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது. வெளிநாடுகளில் ஒருநாள், டி20 தொடர்களை வென்றது. 

ஒரே குறை, ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருந்த காலத்தில் இந்திய அணியால் உலகக் கோப்பைப் போட்டியை வெல்ல முடியவில்லை. 2014-16 காலகட்டத்தில் இந்திய அணியின் இயக்குநராகவும் அவர் பணியாற்றியுள்ளார். 

இந்நிலையில் ஒரு பேட்டியில் ரவி சாஸ்திரி கூறுகையில், “என்னைப் பயிற்சியாளராகத் தேர்வு செய்த தேர்வுக்குழுவினருக்கு நன்றி. என்னுடைய பயணத்துக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. ஒருவரைக் குறிப்பிட்டு நன்றி சொல்ல விரும்புகிறேன். என். சீனிவாசன். 2014-ல் இப்பணியை நான் செய்யவேண்டும் என வற்புறுத்தினார். 

Also Read: T20 World Cup 2021

இப்பணியைச் சிறப்பாகச் செய்யமுடியும் என்கிற நம்பிக்கை அப்போது என்னிடம் இல்லை. என்னை விடவும் என் திறமையில் அவருக்கு அதிக நம்பிக்கை இருந்தது. என். சீனிவாசனின் நம்பிக்கையை நான் வீணடிக்கவில்லை” என நம்புகிறேன் என்றார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை