‘புஷ்பானா ஃபிளவர்னு நெனச்சிய..ஃபயர்’ இணையத்தை கலக்கும் ஜடாஜாவின் புகைப்படம்!

Updated: Thu, Jan 13 2022 15:53 IST
Ravindra Jadeja recreates Allu Arjun's look from Pushpa movie
Image Source: Google

தென்னிந்திய நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள புஷ்பா திரைப்படம் நாடு முழுவதும் படு மாஸான வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக அதில் வரும் பஞ்ச் வசனங்களுக்கு தனி வரவேற்பு கிடைத்துள்ளது.

ரசிகர்களால் கவரப்பட்ட இந்த திரைப்படம், கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவையும் விட்டுவைக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவீந்திர ஜடேஜா "புஷ்பா.. புஷ்பராஜ்" என்று தொடங்கும் பஞ்ச் டயலாக்கிற்கு நடித்து வீடியோவை வெளியிட்டிருந்தார். இது நம்ம ஜடேஜாவா என ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியம் ஏற்பட்டது. 

இந்நிலையில் அந்த படத்தின் மீதான மோகத்தால் தற்போது அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளார். அல்லு அர்ஜுனின் தோற்றத்தை போன்றே ஹேர்ஸ்டைல், தாடி, உடை என அனைத்தையும் மாற்றிக்கொண்டு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இதுகுறித்த புகைப்படமும் இணையத்தை தெரிக்கவிட்டு வருகிறது. மேலும் அதில், "புஷ்பானா ஃப்ளவர்னு நினச்சியா.. ஃபையர் என" வசனத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்களை உற்சாகப்படுத்தும் ஜடேஜா, அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தயங்கவில்லை. அந்த புகைப்படத்தில் ஜடேஜா பீடியை வாயில் வைத்திருப்பது போன்று உள்ளது. இதற்கு அவர், " கிராப்பிக் காட்சிகளுக்காக மட்டுமே புகைப்பிடிப்பது போன்று உள்ளது. நிஜமாக நான் ஒன்றும் புகைப்பிடிக்கவில்லை எனக்குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

 

இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டராக உள்ள ரவீந்திர ஜடேஜா, கடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது காயத்தால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் ஓய்வில் இருக்கும் அவர், ரசிகர்களை உற்சாகப்படுத்த சமூக வலைதளங்களில் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை