ஐபிஎல் 2022: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகும் ஜடேஜா?

Updated: Wed, May 11 2022 16:04 IST
Ravindra Jadeja Set To Be Ruled Out Of IPL 2022: Report (Image Source: Google)

நடப்பு சீசன் தொடங்குவதற்கு முன் ஜடேஜா கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நியமிக்கப்பட்டார். ஆனால் ஜடேஜா தலைமையில் சிஎஸ்கே படுதோல்வியை சந்தித்து, புள்ளி பட்டியலில் தற்போது 9வது இடத்தை பிடித்துள்ளது.

கேப்டனாக செயல்படுவதால் ஜடேஜாவின் தனிப்பட்ட ஆட்டம் கடுமையாக பாதித்தது. நடப்பு சீசனில் 10 போட்டியில் விளையாடியுள்ள ஜடேஜா, 116 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். சராசரி 19 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 118 ஆகும். ஜடேஜா நடப்பு சீசனில் அதிகபட்சமாக 26 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதே போன்று பந்துவீச்சிலும் ஜடேஜா 10 போட்டியில் விளையாடி 5 விக்கெட்டை மட்டுமே எடுத்துள்ளார்.

இதனிடையே ஜடேஜாவுக்கு சுதந்திரமாக கேப்டனாக செயல்பட சிஎஸ்கே அனுமதிக்கவில்லை என்று கூறப்பட்டது. இதனால் விரக்தி அடைந்த ஜடேஜா, கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அன்மையில் அறிவித்தார். இதனையடுத்து புதிய கேப்டனாக மீண்டும் தோனியே அணிக்கு திரும்பினார். அப்போது பேசிய தோனி, ஜடேஜாவுக்கு கேப்டன்ஷி அழுத்தத்தை கையாள முடியவில்லை என்று குறை கூறினார்.

இந்த நிலையில் பெங்களூருக்கு எதிரான போட்டியின் போது சிஎஸ்கே தோற்றது. இருப்பினும் அந்த ஆட்டத்தில் ஜடேஜா ஃபில்டிங் செய்ய முயற்சித்த போது காலில் அடிப்பட்டது. ஆனால் எவ்வித சிகிச்சையும் எடுக்காமல் களத்தில் மீண்டும் ஜடேஜா தொடர்ந்தார். இதனால் அவருக்கு காயம் பெரிதாக இருக்காது என்று நினைக்கப்பட்டது.

ஆனால், டெல்லிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியில் ஜடேஜா சேக்கப்படவில்லை. அப்போது அவர் ஓய்வில் இருப்பதாக கூறப்பட்டது. தற்போது ஜடேஜாவுக்கு காயம் குணமாகவில்லை என்று கூறி, அவர் தொடரிலிருந்து வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த சீசனில் ரெய்னாவும் இதே போன்று தான் காயம் என்று முதலில் கூறி வெளியே உட்கார வைத்தனர். பின்னர் அணியில் சேர்க்கப்படவில்லை. இதனிடையே, ஜடேஜா சமூக வலைத்தளத்தில் சிஎஸ்கே வை பின்தொடர்வதை நிறுத்திவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை