ஐபிஎல் 2022: சிஎஸ்கேவின் இந்த மாற்றம் எனக்கு வியப்பாக இருந்தது - ஃபாஃப் டூ பிளெசிஸ்!

Updated: Wed, May 04 2022 17:31 IST
Image Source: Google

ஐபிஎல் 15ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பாக சிஎஸ்கே அணியின் கேப்டன்சியிலிருந்து தோனி விலக, ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

ஆனால் ஜடேஜாவின் கேப்டன்சியில் சிஎஸ்கே அணி சிறப்பாக செயல்படவில்லை. ஜடேஜாவின் கேப்டன்சியில் தொடர் தோல்விகளை தழுவியது சிஎஸ்கே அணி. கேப்டன்சி அழுத்தத்தால் ஜடேஜா பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் சொதப்பினார். சிஎஸ்கே அணியும் தொடர் தோல்விகளை தழுவியது. அதன்விளைவாக கேப்டன்சியிலிருந்து ஜடேஜா விலகியதையடுத்து தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.

தோனி கேப்டன்சியை ஏற்ற அடுத்த போட்டியிலேயே சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது. அடுத்ததாக சிஎஸ்கே அணி இன்று ஆர்சிபியை எதிர்கொள்கிறது. ஆர்சிபியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ், சிஎஸ்கே அணியில் தோனியின் கேப்டன்சியில் நீண்டகாலம் ஆடிய அனுபவமிக்கவர் என்பதால், சிஎஸ்கே அணியை பற்றியும், தோனியின் கேப்டன்சி பற்றியும் நன்கு அறிந்தவர். எனவே போட்டி கடுமையாக இருக்கும். அதேபோல டு பிளெசிஸின் நிறை, குறைகளை அறிந்த அணி சிஎஸ்கே.

இந்நிலையில், சிஎஸ்கே அணியின் கேப்டன்சி மாற்றம் குறித்து ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய ஃபாஃப் டு பிளெசிஸ், “சீசனின் இடையே சிஎஸ்கே அணியின் கேப்டன் மாற்றப்பட்டது எனக்கு பெரும் வியப்பாக இருந்தது. சீசனுக்கு முன்பாக நடந்த கேப்டன்சி மாற்றமும் வியப்பாகத்தான் இருந்தது. வீரர்களிடமிருந்து அவர்களது சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வந்துவிடுவார் தோனி.அதுதான் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு காரணம்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை