ஐபிஎல் 2021: பெங்களூரு vs டெல்லி - உத்தேச அணி!
அமீரகத்தில் நடைபெற்று வரும் 14வது ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை எட்டி வருகிறது. இன்றுடன் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்து பிளே ஆஃப் சுற்று தொடங்கவுள்ளது.
இந்த சீசனில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் 4ஆவது இடத்திற்காக மோதி வருகின்றன.
4ஆவது இடத்திற்கான போட்டி ஒருபுறம் நீடித்து வரும் நிலையில் மற்றொரு புறம் 2வது இடத்திற்காக சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் போட்டிப்போட்டு வருகின்றன. 14 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி 18 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் ரன் ரேட் +0.455 என உள்ளது.
இதே போல ஆர்சிபி அணி 13 போட்டிகளில் 16 புள்ளிகளை பெற்றுள்ளது. அந்த அணியின் ரன் ரேட் -0.159 ஆக உள்ளது. ஆர்சிபிக்கு இன்னும் ஒரு போட்டி மீதம் இருப்பதால் 2ஆவது இடத்தை பிடிக்க முயற்சித்து வருகிறது.
அதன்படி ஆர்சிபி அணி இன்று நடைபெறும் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இரு அணியிலும் அதிரடியான வீரர்கள் இருப்பதால் இப்போட்டியில் யார் வெற்றிபெறுவார் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இப்போட்டிக்காக இரு அணிகளின் உத்தேச பிளேயிங் லெவன்
ஆர்சிபி - விராட் கோலி (கே), தேவ்தத் படிக்கல், ஸ்ரீகர் பாரத், கிளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ், டேனியல் கிறிஸ்டியன், ஷாபாஸ் அகமது, ஜார்ஜ் கார்டன், ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
டெல்லி கேப்பிட்டல்ஸ் - பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (கே), ரிபால் படேல், ஷிம்ரான் ஹெட்மையர், அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, அவேஷ் கான், அன்ரிச் நோர்ட்ஜே.