தோனியின் சாதனையை நூழிலையில் தவறவிட்ட ரிஷப் பந்த்!

Updated: Wed, Dec 29 2021 22:45 IST
Image Source: Google

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி பாக்சிங் டே போட்டியாக துவங்கிய இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் முதல் இன்னிங்சில் நான்கு கேட்ச்களை பிடித்து அசத்தினார். 

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்டகால சாதனையாக இருந்த தோனியின் ரெக்கார்டு ஒன்றிணையும் அவர் முறியடித்திருந்தார்.

அதன்படி தனது 26ஆவது போட்டியிலேயே 100 விக்கெட் விழ காரணமாக இருந்த முதல் இந்திய விக்கெட் கீப்பராக பந்த் சாதனை படைத்தார். அவருக்கு முன்னதாக தோனி 36 போட்டியில் 100 விக்கெட் விழ காரணமாக இருந்ததே அதிவேக சாதனையாக இருந்தது.

இந்நிலையில் தோனியின் மற்றொரு சாதனையை தகர்க்கும் வாய்ப்பை தற்போது ரிஷப் பந்த் நூலிழையில் தவற விட்டுள்ளார். அதன்படி ஒரு ஆண்டில் அதிகபட்ச டெஸ்ட் ரன்கள் அடித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தோனி 749 ரன்களை விளாசி இருந்தார். ஆனால் அதனை தற்போது ரிஷப் பந்த் ஒரு ரன் வித்தியாசத்தில் தவிர விட்டுள்ளார்.

இந்த 2021 ஆம் ஆண்டு மட்டும் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 748 ரன்களை குவித்து ஒரு ரன் வித்தியாசத்தில் அந்த சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை அவர் தவறவிட்டுள்ளார். ஏனெனில் இந்த ஆண்டின் கடைசி போட்டியான இதில்  இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து ரிஷப் பண்ட் 42 ரன்களை அடித்திருந்தார்.

ஒருவேளை இந்த போட்டியில் மேலும் 1 ரன் அடித்திருந்தால் கூட அந்த சாதனையை சமன் செய்திருக்கலாம். இப்படி ஒரு ரன் வித்தியாசத்தில் இந்த சாதனையை அவர் தவற விட்டாலும் இனி வரும் காலத்தில் நிச்சயம் அந்த சாதனையை தகர்த்து முன் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை