கரோனா தொற்றிலிருந்து மீண்டார் ரிஷப் பந்த்!
விராட் கோலி தலைமயிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி 23 வீரர்களுடன் இங்கிலாந்து சென்றுள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடிய நிலையில், இங்கிலாந்துடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்திற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர் மருத்துவ கணகாணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டார். மேலும் கவுண்டி அணியுடான பயிற்சி ஆட்டத்திலிருந்து அவர் விலக்கப்பட்டார்.
இதையடுத்து இன்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஜூலை 21ஆம் தேதி சக அணி வீரர்களுடன் அவர் மீண்டும் பயிற்சிக்கு திரும்புவார் என்றும், 28ஆம் தேதி நடைபெறவுள்ள இரண்டாவது பயிற்சி போட்டியிலும் பங்கேற்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.