சூர்யகுமார் யாதவிடம் வம்பிழுத்த பாகிஸ்தான் வீரர்கள்!

Updated: Sun, Sep 04 2022 22:03 IST
Image Source: Google

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதி வருகின்றன. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் அதிரடியான துவக்கம் கொடுத்தனர். இருவரும் தலா 28 ரன்கள் எடுத்து கொடுத்துவிட்டு விக்கெட்டை இழந்தனர்.

இதன்பின் களத்திற்கு வந்த சூர்யகுமார் யாதவ் (13), ரிஷப் பந்த் (14), ஹர்திக் பாண்டியா (0) மற்றும் தீபக் ஹூடா (16) ஆகியோர் தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுக்காமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறினர். 

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் போட்டியின் தன்மையை உணர்ந்து மிக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 44 பந்துகளில் 60 ரன்கள் எடுத்திருந்த போது கடைசி ஓவரில் ரன் அவுட்டானார்.

விராட் கோலி விக்கெட்டை இழந்தபிறகு களத்திற்கு வந்த ரவி பிஸ்னோய் கடைசி இரண்டு பந்துகளிலும், அதிர்ஷ்டத்தால் இரண்டு பவுண்டரிகள் அடித்து கொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 181 ரன்கள் எடுத்துள்ளது.

பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஷாதப் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை