விராட் கோலியை முந்தினார் ரோஹித் சர்மா!

Updated: Thu, Sep 01 2022 16:13 IST
Image Source: Google

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 27ஆம் தேதி துவங்கியது. இந்த தொடரில் தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி, ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்களின் பொறுப்பான விளையாட்டின் மூலம் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து நேற்று நடைபெற்ற ஹாங்காங் அணிக்கெதிரான போட்டியிலும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அபாரமாக செயல்பட்டு 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. 

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கும் தகுதிப்பெற்று அசத்தியுள்ளது.  இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றதன் மூலம் கேப்டன் ரோஹித் சர்மா புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார். 

அதன்படி வீராட் கோலி 50 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக இருந்து 30 வெற்றியை பெற்றுள்ளார். 16 போட்டியில் தோல்வி ஏற்பட்டது. 2 ஆட்டம் முடிவு இல்லை. 2 போட்டி ‘டை’ ஆனது. இந்நிலையில் ரோஹித் சர்மா 36 போட்டியில் 30 வெற்றி பெற்று சமநிலையில் இருந்தார். இதில் 6 ஆட்டத்தில் மட்டுமே தோல்வி ஏற்பட்டது.

இந்நிலையில், ஹாங்காங்கை வீழ்த்தியதன் மூலம் ரோஹித் சர்மா 31 வெற்றியுடன் 2ஆவது இடத்துக்கு முன்னேறினார். இதன்மூலம் விராட் கோலி 3ஆவது இடத்துக்கு பின் தங்கியுள்ளார். தோனி 72 போட்டியில் 41 வெற்றியுடன் முதல் இடத்தில் உள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை