சர்வதேச டி20-இல் ரோஹித் எட்டிய புதிய மைல் கல்!

Updated: Tue, Nov 09 2021 10:14 IST
Image Source: Google

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தன. நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - நமீபியா அணிகள் விளையாடின. 

இதில் முதலில் பேட்டிங் செய்த நமீபியா 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 132 ரன்கள் சேர்த்தது. இந்தியா சார்பில் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டும், பும்ரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்து ஆடிய இந்தியா கே.எல். ராகுல், ரோகித் சர்மாவின் அபார ஆட்டத்தால் 15.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் இருவரும் அரை சதமடித்து அசத்தினர். 

இந்தப் போட்டியில் ரோகித் சர்மா 37 பந்துகளில் 4 சிக்சர்கள், 7 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இந்நிலையில், டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா 108 போட்டிகளில் விளையாடி 3,038 ரன்களை எடுத்துள்ளார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3000 ரன்கள் கடந்த 3ஆவது வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

Also Read: T20 World Cup 2021

இந்தப் பட்டியலில் இந்திய அணியின் விராட் கோலி முதலிடத்திலும், நியூசிலாந்து அணியின் மார்டின் கப்தில் இரண்டாம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை