பாபர் ஆசாமின் கேப்டன்சி சாதனையை சமன்செய்த ரோஹித் சர்மா!

Updated: Tue, Jun 25 2024 12:40 IST
Image Source: Google

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 8  சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோஹித் சர்மாவின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 92 ரன்களைச் சேர்த்தார். ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் அரைசதம் கடந்தாலும் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதுடன், நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கும் முன்னேறி அசத்தியது. மேலும் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக வெற்றிகளை பெற்ற வீரர் எனும் பாபர் ஆசாமின் சாதனையை சமன் செய்து ரோஹித் சர்மா அசத்தியுள்ளார். முன்னதாக பாபர் ஆசாம் 85 போட்டிகளில் விளையாடி 48 வெற்றுகளைப் பதிவுசெய்துள்ள நிலையில், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 6 போட்டிகளில் விளையாடி 48 வெற்றியை (சூப்பர் ஓவர்உள்பட) பதிவுசெய்து சாதனையை சமன்செய்துள்ளார். 

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பதிவுசெய்த கேப்டன்கள் (சூப்பர் ஓவர்கள் உள்பட)

  • 48 -ரோஹித் சர்மா (60 போட்டிகள்)
  • 48 -பாபர் ஆசம் (85 போட்டிகள்)
  • 45 -பிரையன் மசாபா (60 போட்டிகள்)
  • 44 -இயோன் மோர்கன் (72 போட்டிகள்)
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை