உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: பார்வையாளர்களுக்கு அனுமதி!

Updated: Thu, May 20 2021 21:41 IST
Rose Bowl Stadium Likely To Allow 4000 Spectators For WTC Final (Image Source: Google)

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் மைதானத்தில் ஜூன் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடப்பதால் பட்டம் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் ரசிகர்களுக்கு மற்றும் ஒரு இன்பச் செய்தி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை காண சுமார் 4 ஆயிரம்  ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா அச்சம் காரணமாக பல நாடுகளில் மைதானங்களில் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

ஆனால் இங்கிலாந்தில் கரோனா தாக்கம் குறைந்துள்ளதால் கவுண்டி போட்டிகளில் தற்போது ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் 4 ஆயிரம் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. 

இதில் 50 சதவீத டிக்கெட்டை (2 ஆயிரம் பேர்) ஐ.சி.சி. அதன் ஸ்பான்சர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு எடுத்துக்கொள்கிறது. மீதமுள்ள 2 ஆயிரம் டிக்கெட் ரசிகர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை