ஐபிஎல் 2022: ரசிகர்களை ஈர்த்த பட்லரின் செயல்!

Updated: Fri, Apr 15 2022 11:45 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 24ஆவது லீக் போட்டியில் நேற்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி தான் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் குஜராத் அணி வென்றாலும், ரசிகர்களின் மனதை வென்றவர் ஜாஸ் பட்லர் தான். குஜராத் அணியின் பேட்டிங்கிற்கு ஹர்திக் பாண்டியா பெரும் உதவியாக இருந்தார். 52 பந்துகளில் 87 ரன்களை விளாசினார். ஆட்டத்தின் 12ஆவது ஓவரின் போது பாண்டியா அடித்த ஒரு பந்து பவுண்டரியை நோக்கி சென்றது. பந்தை துரத்தி சென்ற ஜாஸ் பட்லர் பவுண்டரி எல்லையில் டைவ் அடித்து தடுத்தார்.

அனைவரும் அது பவுண்டரி செல்லவில்லை என நம்பினர். ஆனால் ஜாஸ் பட்லர், திடீரென கள நடுவரை அழைத்து தனது கால்கள் பவுண்டரியை தொட்டுவிட்டதா? என்பது உறுதி செய்யவும் என கேட்டார். இதன்பின்னர் தான் நடுவரே 3ஆவது நடுவரை அனுகினார். இறுதியில் பட்லர் பவுண்டரி எல்லையை தொட்டது தெரியவந்தது. ராஜஸ்தான் அணிக்கு 4 ரன்கள் கூடுதல் இலக்கானது. அவரின் இந்த மனது ரசிகர்களை கவர்ந்தது.

இதே போல நேற்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா 87 ரன்கள் அடித்த மூலம் நடப்பு சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரரானார். எனவே ஏற்கனவே முதலிடத்தில் இருந்த பட்லர், களத்திலேயே தனது ஆரஞ்ச் தொப்பியை கழற்றினார். போட்டியின் போது எந்தவொரு வீரரும் இதை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எனினும் வேறொருவர் முந்திவிட்டார் என தெரிந்த அடுத்த நொடியே தனக்கு பெருமை வேண்டாம் என முடிவெடுத்தார். இது ரசிகர்கள் மனதை பெரிதாக வென்றது.

ஃபீல்டிங்கில் அசத்திய ஜாஸ் பட்லர், பேட்டிங்கிலும் அட்டகாசம் செய்தார். ராஜஸ்தான் அணியில் அனைத்து வீரர்களும் சொதப்பிய போதும், ஜாஸ் பட்லர் மட்டும் 24 பந்துகளில் 54 ரன்களை விளாசினார். இதில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களும் அடங்கும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை