SA vs IND, 3rd Test: வெற்றியை நோக்கி தென் ஆப்பிரிக்கா..!

Updated: Fri, Jan 14 2022 16:15 IST
Image Source: Google

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றதால் தொடர் 1-1 என சமனில் உள்ள நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடந்துவருகிறது.

தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 223 ரன்கள் அடித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 79 ரன்கள் அடித்தார். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 210 ரன்கள் அடித்தது. தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக கீகன் பீட்டர்சன் 72 ரன்கள் அடித்தார். இந்திய அணி சார்பில் பும்ரா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் 13 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, ரிஷப் பண்ட்டின் பொறுப்பான சதத்தால் (100*) 198 ரன்கள் அடித்த இந்திய அணி, 211 ரன்கள் முன்னிலை பெற்று, 212 ரன்கள் என்ற இலக்கை தென் ஆப்பிரிக்காவுக்கு நிர்ணயித்தது. 

இதைத்தொடர்ந்து 212 ரன்கள் என்ற இலக்கை விரட்ட தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் மார்க்ரம் 16 ரன்னில் ஷமியின் பந்தில் ஆட்டமிழந்தார். 3ஆம் நாள் ஆட்டத்தின் கடைசி ஓவரில் டீன் எல்கர் 30 ரன்னில் பும்ராவின் பந்தில் ஆட்டமிழந்தார். 

பின் இன்று 4ஆம் நாள் ஆட்டத்தை கீகன் பீட்டர்சனும் வாண்டர் டுசனும் தொடர்ந்தனர். இருவரும் நிதானமாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். அபாரமாக ஆடிய பீட்டர்சன் அரைசதம் அடித்தார். 

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பீட்டர்சன் 82 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து களமிறங்கிய டெம்பா பவுமா நிதானமாக விளையாடி விக்கெட் இழப்பைத் தடுத்தார். இதன்மூலம் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களைச் சேர்த்துள்ளது.

இதில் வேண்டர் டுசென் 22 ரன்களுடனும், பவுமா 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். மேற்கொண்டு தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற இன்னும் 41 ரன்களே மீதமுள்ளதால், இப்போட்டியின் முடிவு ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை