SA vs IND, 2nd Test: தென் ஆப்பிரிக்க அணி வலுவாக திரும்பும் - ஹாசிம் அம்லா!

Updated: Sat, Jan 01 2022 21:54 IST
Image Source: Google

செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் ஜஹனன்ஸ்பர்க்கில் நடைபெறவுள்ளது. மேலும் இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி தோல்வியடைந்தால் தொடரை இலக்கும்.

இதன் காரணமாக இப்போட்டியில் நிச்சயம் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்திற்கு தென் ஆப்பிரிக்க அணி தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜஹனன்ஸ்பர்க்கில் தென் ஆப்பிரிக்க அணி நிச்சயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என அந்த அணியின் முன்னாள் வீரர் ஹாசிம் அம்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், செஞ்சூரியன் மைதானம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமான மைதானம். அதனால் தான் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. மேலும் முதல் இன்னிங்ஸில் 300 ரன்களையும் சேர்த்திருந்தது. 

ஆனால் தென் ஆப்பிரிக்க அணியால் அந்த ஸ்கோரை எட்டமுடியவில்லை. ஏனெனில் 130 ரன்கள் பின் தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்க அணியால் எளிதாக பேட்டிங் செய்யமுடியாது. மேலும் முதல் நாள் ஆட்டத்தில் மட்டுமே பிட்ச் பேட்டிங் செய்ய ஏதுவாக இருந்தது. 

அதன்பின் இரண்டாம் நாள் ஆட்டம் இரு அணிகளுக்கும் கடினமானதாக அமைந்தது. அதனால் தான் எங்கள் பந்துவீச்சாளர்களால் இந்திய அணியை 300 ரன்களுக்கு நிறுத்த முடிந்தது. இல்லையெனில் இந்தியா நிச்சயம் 400 ரன்களைக் கடந்திருக்கும். 

ஆனால் ஜஹனன்ஸ்பர்க் மைதானத்தில் எங்கள் வீரர்கள் பலமாக திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். மேலும் அணியின் மிடில் ஆர்டரில் டெம்பா பவுமா சிறப்பாக செயல்பட்டு வருவதால் நிச்சயம் இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை