SA vs IND: குருவின் சாதனையை முறியடித்த சிஷ்யன்!

Updated: Tue, Dec 28 2021 20:31 IST
Image Source: Google

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. 

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 327 ரன்களில் ஆல் அவுட்டாகி இன்னிங்ஸை முடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களைச் சேர்த்துள்ளது.

இந்நிலையில் இப்போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மிகப்பெரும் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார். 

அச்சாதனை யாதெனில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக குறைந்த இன்னிங்ஸில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது தான். 

தோனி தனது 36ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது 100 பேரை ஆட்டமிழக்க காரணமாக அமைந்து இருந்தார். ஆனால் தற்போது இந்த சாதனையை ரிஷப் பந்த், 25 டெஸ்ட் போட்டிகளில் 100 பேரை ஆட்டமிழக்க காரணமாக அமைந்து முறியடித்துள்ளார். 

தென் ஆப்பிரிக்க வீரர் டெம்பா பவுமாவை ஆட்டமிழக்க செய்ததன் மூலம் ரிஷப் பந்த் இந்த சாதனையை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை