SA vs IND: இந்திய வீரர்களுக்கு அட்வைஸ் வழங்கிய சச்சின் டெண்டுல்கர்!

Updated: Tue, Dec 21 2021 21:10 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. வரும் 26ஆம் தேதி செஞ்சூரியனில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. 

இந்த டெஸ்ட் தொடர், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது என்பதால் இரு அணிகளும் வெற்றி வேட்கையுடன் மோதுகின்றன. தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த ரோஹித் சர்மா காயத்தால் வெளியேறியதால், அவருக்கு பதிலாக பிரியன்க் பன்சால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது துணை கேப்டன் பொறுப்பு தற்போது கேஎல் ராகுலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தென் ஆப்பிரிக்காவில் இந்திய வீரர்கள் எப்படி பேட்டிங் ஆட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர்,“ஃப்ரண்ட் ஃபூட் டிஃபென்ஸ் (தடுப்பாட்டம்) மிக முக்கியம் என்பதை நான் பலமுறை வலியுறுத்தியிருக்கிறேன். தடுப்பாட்டம் தென் ஆப்பிரிக்காவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது. முதல் 25 ஓவர்கள் டிஃபென்ஸ் ஆடுவது மிகக்கடினம். 

உடம்புக்கு வெளியே பேட்டை வீசிவிடவே கூடாது. உடம்புக்கு வெளியே பேட்டை மட்டும் விட்டால், கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்பாட்டை இழந்துவிடுவீர்கள். எனவே உடம்புக்கு வெளியே பேட்டை மட்டும் விடக்கூடாது.

இங்கிலாந்தில் ரோஹித்தும் ராகுலும் சிறப்பாக ஆடியதற்கு காரணம், உடம்புக்கு வெளியே பேட்டை மட்டும் அவர்கள் விடவேயில்லை; உடம்புடன் ஒட்டியே ஆடினர். அது ஒன்றுதான், முந்தைய இங்கிலாந்து சுற்றுப்பயணங்களுக்கும், கடைசி இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கும் இடையேயான பெரிய வித்தியாசம். 

பேட்டை மட்டும் தனியாக விடாததால் தான், கடைசி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய தொடக்க வீரர்கள் வெற்றிகரமாக திகழ்ந்தனர்” என்று ஆலோசனை வழங்கியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை