மருத்துவமனையில் சச்சின் அனுமதி; ரசிகர்கள் அதிர்ச்சி!

Updated: Fri, Apr 02 2021 17:20 IST
Image Source: Google

கரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்ட கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் வீட்டிலேயே அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், அனைவரின் பிரார்த்தனைகளுக்கும் நன்றி. மருத்துவ ஆலோசனையின் கீழ் ஏராளமான முன்னெச்சரிக்கை விஷயமாக, நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவேன் என்று நம்புகிறேன். கவனமாக இருங்கள். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், என்று கூறியுள்ளார்.

மேலும், இன்று 2011 உலகக்கோப்பையை வென்ற நாள். அதை நினைவுகூர்ந்த சச்சின் தனது ட்வீட்டில், உலகக்கோப்பையை வென்று 10 ஆண்டுகள் ஆகிவிட்டன, இந்தியர்களுக்கும் இந்திய அணிக்கும் 10ஆம் ஆண்டு மகிழ்ச்சி கொண்டாட்ட நாளுக்கான வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::