ஐபிஎல் 2023: சிஎஸ்கேவிடம் டிமெண்ட் செய்த தோனி; ஒரு வீரரை ஏலத்தில் வாங்க கடும் போட்டி!

Updated: Tue, Dec 20 2022 12:58 IST
Sam Curran on CSK’s ‘MOST WANTED’ list, Captain MS Dhoni interested in bringing back England all-rou (Image Source: Google)

2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று கொச்சியில் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் இறுதிகட்டத்தில் உள்ளன.  அனைத்து அணிகளும் தங்களது தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட்ட சூழலில், அவர்களுக்கு மாற்று வீரராக யாரை தேர்வு செய்யலாம் என்ற வியூகங்களில் ஈடுபட்டு வருகின்றன.

இதில் மிக முக்கியமான அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தான். எம்எஸ் தோனி தலைமையிலான சிஎஸ்கே கடந்தாண்டு மோசமான தோல்விகளால் 9ஆவது இடத்தை பிடித்திருந்தது. எனவே இந்த முறை தோனியின் கடைசி தொடராக இருக்கலாம் என்பதால் எப்படியாவது கோப்பையை வென்று விட வேண்டும் என பலகட்ட திட்டங்களை தீட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ஒரே ஒரு வீரருக்கு மட்டும் தோனி டிமாண்ட் செய்திருப்பதாக தெரிகிறது. அதாவது சிஎஸ்கேவின் கடைக்குட்டி சிங்கம் என அழைக்கப்பட்ட சாம் கரண் தான் அது. சென்னை அணிக்காக 2020, 2021 ஆகிய சீசன்களில் மொத்தம் 23 போட்டிகளில் விளையாடிய அவர் ஆச்சரியம் தரும் வகையில் 2022ம் ஆண்டு தொடரை புறகணித்தார். ஒரு முக்கிய காரணத்திற்காக இந்தாண்டு கொண்டு வர தோனி திட்டமிட்டுள்ளார்.

சென்னை அணியின் முதுகெலும்பாக பார்க்கப்பட்ட டுவைன் பிராவோ ஓய்வை அறிவித்துவிட்டார். அவரின் இடத்தை சரியாக நிரப்பக்கூடிய வீரராக பென் ஸ்டோக்ஸ், சாம் கரண் போன்றோர் இருப்பார்கள். ஆனால் சாம் கரணுக்கு குறைந்த வயது தான். அவரின் ஃபார்மும் சிறப்பாக உள்ளதால், இன்னும் சில வருடங்களுக்கு அவர் பயன்படுவார் என்ற காரணத்திற்காக அவருக்கு தோனி குறிவைத்துள்ளார்.

இங்கிலாந்து வீரரான சாம் கரண் தற்போது அசுரத்தனமான ஃபார்மில் இருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து கோப்பையை வெல்ல அவரும் முக்கிய காரணமாகும். எனவே அவருக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டிருந்தது. இவர் சிஎஸ்கேவுக்கு திரும்பினால், அணியின் பலம் ஏகபோகத்திற்கு கூடும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை