டி20 உலகக்கோப்பை: ஹர்திக் பாண்டியாவிற்கு மாற்று வீரராக சாம்சன்?
ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது 14ஆவது ஐபிஎல் தொடரானது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இந்த தொடர் முடிந்த சில நாட்களிலேயே, அக்டோபர் 17ஆம் தேதி உலக கோப்பை டி20 தொடரானது தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் இந்திய அணியும் கடந்த மாத தொடக்கத்தில் அணியை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடரில் இடம் பெற்றிருந்த பல வீரர்கள் ஐபிஎல் தொடரில் ஃபார்ம் அவுட்டில் இருந்த காரணத்தினால் பிசிசிஐ சற்று வருத்தத்தில் இருந்தது. இருப்பினும் தொடரின் முடிவில் இந்திய அணியில் இடம் பிடித்த வீரர்கள் ஓரளவு சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்களது திறமையை நிரூபித்துள்ளனர். இதற்கிடையில் இந்திய அணியை பெரிய வருத்தத்தில் ஆழ்த்தியுள்ள ஒரு விசயமாக ஹார்டிக் பாண்டியா, ராகுல் சஹார் ஆகியோரது ஃபார்ம் பார்க்கப்படுகிறது.
ஏனெனில் கடந்த பல ஆண்டுகளாகவே பந்து வீசாமல் இருந்து வரும் இவர் பேட்டிங்கிலும் சொதப்பி வருகிறார். உலகக்கோப்பை அணியில் ஆல் ரவுண்டராக சேர்க்கப்பட்ட பாண்டியா இந்த தொடரில் பந்து வீசுவாரா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் பந்து வீசவில்லை என்றால் மாற்று வீரர் நிச்சயமாக இந்திய அணியில் சேர்க்கப்படலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் பாண்டியாவின் உடல் தகுதியை சரிபார்க்க பிசிசிஐ அக்டோபர் 15ஆஆம் தேதி கெடு விதித்துள்ளது.
அதற்குள் அவர் பந்து வீச தயாராகிவிடுவார் என்று கூறப்படுகிறது. ஒருவேளை பரிசோதனையின் முடிவில் தான் பாண்டியா இடம் பெறுவாரா ? இல்லையா ? என்பது தீர்மானிக்கப்படும். ஒருவேளை பாண்டியா பந்துவீசும் அளவிற்கு உடற்தகுதியுடன் இல்லை என்றால் நிச்சயம் மாற்றுவீரர் அணிக்கு அழைக்கப்படுவார் என்று தெரிகிறது.
அந்த வகையில் பிசிசிஐ பாண்டியாவுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் உள்பட 3 இளம் வீரர்களில் ஒருவரை பேக் அப் வீரராக தேர்வு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சஞ்சு சாம்சன், வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷல் பட்டேல், ஷிவம் மாவி ஆகிய மூவரிடமும் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிகிறது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
மேலும் அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை அவர்கள் அனைவரும் நாடு திரும்பக் கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் இவர்களில் யார் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.