ஐபிஎல் 2025: ஷேன் வார்னேவின் சாதனையை முறியடித்த சஞ்சு சாம்சன்!
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று சண்டிகரில் நடைபெற்றது. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 50 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரில் இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் புள்ளிப்பட்டியலிலும் 6ஆம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் தோல்வியையே தழுவாமல் இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் சிறப்பு சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டன் எனும் மறைந்த ஷேன் வார்னேவின் சாதனையை சஞ்சு சாம்சன் முறியடித்து அசத்தியுள்ளார். முன்னதாக ஆஸ்திரேலிய ஜாம்பவன ஷேன் வார்னே ராஜஸ்தான் ராயல்ஸின் கேப்டனாக 31 வெற்றிகளை பதிவுசெய்திருந்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்சமயம் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக 32 வெற்றிகளைப் பதிவுசெய்ததுடன், இந்த பட்டியலிலும் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக அதிக வெற்றிகள்
- 32 – சஞ்சு சாம்சன் (62 போட்டிகள்)*
- 31 - ஷேன் வார்னே (55 போட்டிகள்)
- 18 - ராகுல் டிராவிட் (34 போட்டிகள்)
- 15 - ஸ்டீவன் ஸ்மித் (27 போட்டிகள்)
- 9 - அஜிங்கியா ரஹானே (24 போட்டிகள்)
இப்போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 205 ரன்களைக் குவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 67 ரன்களையும், ரியான் பராக் 43 ரன்களையும், கேப்டன் சஞ்சு சாம்சன் 38 ரன்களையும் சேர்த்து அசத்தினர். பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய லோக்கி ஃபெர்குசன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
Also Read: Funding To Save Test Cricket
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில், நேஹால் வதேரா 62 ரன்களையும், கிளென் மேக்ச்வெல் 30 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.