ஐபிஎல் 2022: ராஜஸ்தான் அணிக்காக செஞ்சூரி விளாசும் சாம்சன்!

Updated: Tue, Mar 29 2022 17:35 IST
Image Source: Google

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி என்றாலே சஞ்சு சாம்சன் தான் ஞாபகத்துக்கு வருவார். ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி கடந்த மூன்று வருடங்களாக மோசமாக விளையாடி வருகிறது. 2019இல் 7ஆம் இடம், 2020இல் 8ஆம் இடம், 2021இல் 7ஆம் இடம் எனப் புள்ளிகள் பட்டியலில் இடம்பிடித்தது. 

இதனால் இந்த வருடம் அந்த அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சஹால், அஸ்வின், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, ஜேம்ஸ் நீஷம் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளார். 27 வயது சஞ்சு சாம்சன், 2021 ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாகப் பணியாற்றினார். 

2012இல் கேகேஆர் சஞ்சு சாம்சனைத் தேர்வு செய்தது. அதன்பிறகு முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த், சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் அணிக்கு அறிமுகம் செய்து வைத்தார். அன்று முதல் ராஜஸ்தான் அணியின் அடையாளங்களில் ஒன்றாக மாறினார் சஞ்சு சாம்சன். 

கடந்த 2013 முதல் (இரு வருடங்கள் தவிர) ராஜஸ்தான் அணிக்காக சஞ்சு சாம்சன் விளையாடி வருகிறார். 2016, 2017 ஆண்டுகளில் டெல்லி அணிக்காக விளையாடினார். 2018இல் ரூ. 8 கோடிக்கு சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் அணி தேர்வு செய்தது. கடந்த வருடப் போட்டியில் ராஜஸ்தானால் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற முடியாமல் போனாலும் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி 484 ரன்கள் எடுத்தார். 

இதனால் ரூ. 14 கோடிக்கு அடுத்த மூன்று வருடங்களுக்கு அவரைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது ராஜஸ்தான் அணி. மேலும் அணியின் கேப்டனாகவும் அவர் நீடிக்கிறார். 

இந்நிலையில் ஐபிஎல் 2022 போட்டியில் இன்று தனது முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக விளையாடுகிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இது ராஜஸ்தான் அணிக்காக சஞ்சு சாம்சன் விளையாடும் 100ஆவது ஆட்டம். இதற்கு முன்பு ராஜஸ்தான் அணிக்காக ரஹானே, 100 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை