SA vs IND,2nd Test: மழையால் நான்காம் நாள் ஆட்டம் பாதிப்பு!

Updated: Thu, Jan 06 2022 15:41 IST
Image Source: Google

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2ஆவது டெஸ்ட் ஜொஹன்னஸ்பர்க்கில் திங்கள் அன்று தொடங்கியது.

இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ராகுல் 50, அஸ்வின் 46 ரன்கள் எடுத்தார்கள். தென் ஆப்பிரிக்க தரப்பில் ஜான்சன் 4 விக்கெட்டுகளும் ரபாடா, ஒலிவியர் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். 

தென் ஆபிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 229 ரன்கள் எடுத்தது. பீட்டர்சன் 62, பவுமா 51 ரன்கள் எடுத்தார்கள். ஷர்துல் தாக்குர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸில் 60.1 ஓவர்களில் 266 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. விஹாரி ஆட்டமிழக்காமல் 6 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்தார். ரஹானே 58, புஜாரா 53 ரன்கள் எடுத்தார்கள். தெ.ஆ. தரப்பில் ரபாடா, என்கிடி, ஜான்சன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 2-வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற 240 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

தென் ஆப்பிரிக்க அணி 3ஆம் நாள் முடிவில் தனது 2ஆவது இன்னிங்ஸில் 40 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்தது. எல்கர் 46, வான் டர் டுசென் 11 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த பரபரப்பான 4ஆம் நாள் ஆட்டம் மழை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. காலை 11 மணி வரை அங்கு மழை பெய்து வருவதால் 4ஆம் நாள் ஆட்டம் தொடங்கவில்லை. 

மேலும் தற்போது உண்வு இடைவேளைக்கு பிறகாவது ஆட்டம் தொடருமா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் ஆழ்ந்துள்ளனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை