SCO vs NZ, 1st T20I: ஃபின் ஆலான் அபார சதம்; ஸ்காட்லாந்துக்கு 226 டார்கெட்!

Updated: Wed, Jul 27 2022 20:40 IST
Image Source: Google

ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று எடின்பர்க்கில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்து நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு மார்ட்டின் கப்தில் - ஃபின் ஆலன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மார்ட்டின் கப்தில் 40 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஆனால் மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபின் ஆலன் 54 பந்துகளில் தனது முதல் சர்வதேச டி20 சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 101 ரன்கள் எடுத்திருந்த ஆலன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதையடுத்து களமிறங்கிய ஜிம்மி நீஷம் - டேரில் மிட்செல் இணை பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதன்பின் 9 ரன்களில் 30 ரன்களை விளாசிய ஜிம்மி நீஷம் ஆட்டமிழந்தார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்களைச் சேர்த்தது. ஸ்காட்லாந்து அணி தரப்பில் கிறிஸ் சோலே 4 ஓவர்களை வீசி 72 ரன்களை வாரி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை