AUS vs WI, 2nd Test: வெற்றியை நோக்கி நகரும் ஆஸ்திரேலியா!

Updated: Sat, Dec 10 2022 18:28 IST
Image Source: Google

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்கு 511 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதில் அதிகபட்சமாக மார்னஸ் லபுசாக்னே 163 ரன்னிலும், ஹெட் 175 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப், டேவன் தாமஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் கிரேய்க் பிராத்வையிட் 19 ரன்களிலும், ஷமாரா ப்ரூக்ஸ், ஜென்மைன் பிளாக்வுட் 3 ரன்களிலும், டெவான் தமாஸ் 19 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த சந்தர்பால் - ஆண்டர்சன் பிலீப் ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் சந்தர்பால் மேற்கொண்டு ஏதும் ரன்கள் சேர்க்காமல் 47 ரன்கல் ரன் அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

அதனைத் தொடர்ந்து ஆண்டர்சன் பிலிப்பும் 43 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஜேசன் ஹோல்டர், ஜோஷுவா டா சில்வா, அல்ஸாரி ஜோசப் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இறுதிவிக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோஷ்டன் சேஸ் - மைண்டிலி இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.

இருப்பினும் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 212 ரன்களைச் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் லையன் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், மைக்கேல் நேசர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 297 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

அதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கவாஜா அதிகபட்சமாக 45 ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப் 3 விக்கெட்டும், ரூஸ்டன் சேஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 497 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. மூன்றாம் நாள் ஆட்டநேர இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுக்கு ரன்களை எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் ஸ்காட் போலண்ட் 3 விக்கெட் வீழ்த்தினார். இன்னும் இரண்டு நாள் ஆட்டம் உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி எளிதில் வெற்றி பெறும் நிலை காணப்படுகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை