தனது டெஸ்ட் வாழ்க்கையை கும்ப்ளே எவ்வாறு மீட்டார் என்பது குறித்து சேவாக் ஓபன் டாக்!
கடந்த 2007 ஜனவரியில் 52ஆவது டெஸ்ட் போட்டியை விளையாடிய சேவாக் தனது 53வது போட்டியை 2008இல் ஆஸ்திரேலியாவில் விளையாடினார்.
பிறகு, கும்ளே தலைமையில் 2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் கோப்பைத் தொடரில் சேவாக்கு வாய்ப்பு கிடைத்தது. அதிலும் முதலிரண்டுப் போட்டிகளில் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அந்த இரண்டுப் போட்டிகளிலும் இந்தியா தோல்வியுற்றது.
மூன்றாவதுப் போட்டியில் 63 ரன்களை மட்டுமே எடுத்தார். இந்தியா வெற்றிப் பெற்றது. நான்காவதுப் போட்டியில் 151 ரன்களை எடுத்தார். அது இந்திய அணியை தோல்வியில் இருந்து காப்பற்றியது. அந்த ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
இதுகுறித்து பேசிய சேவாக், “நான் அப்போது டெஸ்டில் 10,000 ரன்களை கடந்திருந்தேன். திடீரென டெஸ்ட் போட்டியிலிருந்து எனது பெயர் இல்லாமல் போனது கஷ்டமாக இருந்தது”.
“முதலில் எடுத்த 60 ரன்கள்தான் நான் வாழ்கையிலே கஷ்டப்பட்டு எடுத்த ரன்களாகும். ஏனெனில் என்னைத் தேர்ந்தெடுத்ததுக்காக கும்ப்ளே யாரிடமும் அவமானப்படக்கூடாது என விரும்பினேன். விளையாடும் போது கவனமாக ஆடினேன். மறுபுறத்திலிருக்கும் போது நடுவர்களிடம் பேசுவேன். எனக்கு பிடித்தமான பாடலை முனகுவேன். அழுத்தம் குறைந்தது”.
அந்தத் தொடர் முடிந்ததும் கும்ப்ளே, “ நான் டெஸ்ட் கேப்டனாக நீடிக்கும் வரை உன்னை அணியிலிருந்து நீக்கமாட்டேன்” எனக் கூறினார். “அதுதான் ஒரு வீரருக்குத் தேவை. இதற்கு முன்பு கங்குலி தலைமையில் நான் இவ்வாறு பாதுகாப்பாக உணர்ன்ந்தேன்”.
“அந்தத் தொடரில் அனில் கும்ப்ளே கேப்டனாக இல்லையெனில் அந்தத் தொடரே கைவிடப்பட்டிருக்கும். மேலும், என்னுடையது மட்டுமில்லாமல் ஹர்பஜன் சிங் கிரிக்கெட் வாழ்க்கையும் அத்தோடு முடிந்திருக்கும்” என சேவாக் கூறினார்.
மேலும் சேவாக் தனது சிறந்த பவுலிங் 5/ 104 சாதனையை கும்ப்ளே தலைமையில் எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.