தற்போதுள்ள கிரிக்கெட் வீரர்களில் தன்னை கவர்ந்தவர்கள் குறித்து மனம் திறந்த அஃப்ரிடி!

Updated: Sun, Jul 04 2021 20:09 IST
Image Source: Google

பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிரடி ஆல்ரவுண்டர் ஷாகித் அஃப்ரிடி. பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரராக பல ஆண்டுகளாக ஜொலித்த அஃப்ரிடி, 27 டெஸ்ட், 398 ஒருநாள் மற்றும் 99 டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடியுள்ளார்.

இந்நிலையில் வெவ்வேறு காலக்கட்டங்களில் தன்னை கவர்ந்த வீரர்கள் யார் யார் என அஃப்ரிடி தெரிவித்துள்ளார்

இதுகுறித்து பேசிய அஃப்ரிடி,“தான் பார்த்து ரசித்த, தன்னை கவர்ந்த இன்சமாம் உல் ஹக் மற்றும் சயீத் அன்வர் ஆகியோருடன் இணைந்து ஆடியது மிகப்பெரிய கவுரவம். மேலும் தனது காலக்கட்டத்தில் பிரயன் லாரா மற்றும் மெக்ராத் ஆகிய இருவரும் தன்னை மிகவும் கவர்ந்த வீரர்கள்.

அதேபோல் தற்போதுள்ள கிரிக்கெட் வீரர்களில் தன்னை மிகவும் கவர்ந்த வீரர்கள் டிவில்லியர்ஸ், விராட் கோலி மற்றும் பாபர் அசாம் ஆகியோர் தான். மேலும் ஃபகர் ஸமான் நல்ல ஃபார்மில் ஆடும்போது பார்க்க மிகவும் பிடிக்கும். ஃபகர் ஸமான் நன்றாக ஆடும்போதெல்லாம் பாகிஸ்தான் அணி ஒருதலைபட்சமாக போட்டியை ஜெயிக்கும்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::