வங்கதேச கிரிக்கெட் அணி வீரர் ஷகிப் அல் ஹசன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். நேற்று அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
Advertisement
இதனால் வருகிற 15ஆம்தேதி தொடங்கும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் ஷகிப் அல் ஹசன் விளையாட மாட்டார் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
Advertisement
இலங்கை கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.