டி20 உலக கோப்பை தொடரிலிருந்து ஷாகிப் அல் ஹசன் விலகல்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை போட்டியில் குரூப் 1 பிரிவில் வங்கதேசம் இடம்பிடித்துள்ளது.
அந்த அணி தான் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அடுத்ததாக அந்த அணி தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுடன் மோதவுள்ளது.
இந்நிலையில், வங்கதேசத்தின் ஆல் ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன் காயம் காரணமாக டி20 உலக கோப்பை போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
Also Read: T20 World Cup 2021
சமீபத்தில் ஷார்ஜாவில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் ஷாகிப் அல் ஹசனுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் இத்தொடரிலிருந்து விலகினார்.