ஆல் டைம் ஃபேவரைட் அணியை தேர்வு செய்த ‘ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’!

Updated: Mon, Jul 19 2021 11:52 IST
Image Source: Google

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் சோயப் அக்தர். தனது அதிவேகமான பவுலிங்கால் சச்சின், லாரா, பாண்டிங் உட்பட பல சிறந்த பேட்ஸ்மேன்களை மிரட்டியவர்.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற அக்தர், தற்போது யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் தீவிரமாக செயல்பட்டுவருகிறார். கிரிக்கெட் தொடர்பான அலசல்கள், தனது பார்வை, அணிகளின் செயல்பாடுகள், விமர்சனங்கள், தனது கெரியர் அனுபவம் என பல தகவல்களை அந்த யூடியூப் சேனலில் பகிர்ந்துவருகிறார்.

இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது ஆல்டைம் ஃபெவரைட் லெவனை சோயப் அக்தர் தேர்வு செய்துள்ளார். அவரது ஆல்டைம் சிறந்த ஒருநாள் அணியின் தொடக்க வீரர்களாக சச்சின் டெண்டுல்கரையும், வெஸ்ட் இண்டீஸின் கார்டான் க்ரீனிட்ஜையும் தேர்வு செய்துள்ளார்.

மேலும் 3, 4ஆம் வரிசைகளில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான்களான இன்சமாம் உல் ஹக்,சயீத் அன்வர் ஆகிய இருவரையும், 5, 6ஆவது இடத்திற்கு மகேந்திர சிங் தோனி, ஆடம் கில்கிறிஸ்ட் ஆகிய 2 மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன்களையும் தேர்வு செய்துள்ளார்.

மேலும் 7ஆவது வரிசையில் யுவராஜ் சிங்கையும், ஃபாஸ்ட் பவுலர்களாக வாசிம் அக்ரம் - வக்கார் யூனிஸ் ஆகிய இருவருடன் இந்திய அணியின் உலக கோப்பை வின்னிங் கேப்டனும் ஆல்ரவுண்டருமான கபில் தேவை தேர்வு செய்துள்ளார். 

அவரது அணியில் ஒற்றை சுழற்பந்துவீச்சாளராக ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்னேவை தேர்வு செய்த அக்தர், கபில் தேவ் அல்லது ஷேன் வார்னே தனது அணியின்க் கேப்டனாகா அறிவித்துள்ளார்.

அக்தரின் ஆல்டைம் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் லெவன்:

கார்டான் க்ரீனிட்ஜ், சச்சின் டெண்டுல்கர், இன்சமாம் உல் ஹக், சயீத் அன்வர், எம்.எஸ். தோனி, ஆடம் கில்கிறிஸ்ட், யுவராஜ் சிங், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், கபில் தேவ், ஷேன் வார்ன்(கேப்டன்).

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை