ஐபிஎல் 2022: மோசமான சாதனையைப் படைத்த முகமது சிராஜ்!

Updated: Sat, May 28 2022 14:18 IST
Siraj and Hasaranga Conceded 61 Sixes Combined In IPL 2022! (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் தற்போது முடிவுக்கு வந்துவிட்டது. அகமதாபாத்தில் நேற்று நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தியது. முதலில் ஆடிய ஆர்சிபி அணி  20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் சேர்த்தது. 158 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது

இந்த சீசனில் ஆர்சிபி வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் தேவையற்ற ஒருசாதனையை நிகழ்த்தியுள்ளார்.ஆர்சிபி அணி வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜை ரூ.7 கோடிக்கு ஏலத்தில் விலைக்கு வாங்கியது. நடப்பு ஐபிஎல் சீசனில் சிராஜ் மீது அதிக எதிர்பார்ப்பு வைக்கப்பட்டது. ஆனால், சிராஜின் பந்துவீச்சு இந்த சீசனில் சொதப்பலாகஅமைந்து நிர்வாகத்துக்கு ஏமாற்றத்தை அளித்தது. இதனால் ஒரு போட்டியிலிருந்து கூட சிராஜை நீக்கும் சூழல் ஏற்பட்டது.

இருப்பினும் ப்ளேஆஃப் சுற்றில் அனுபவமான வேகப்பந்துவீச்சாளர் வேண்டும் என்பதற்காக ராஜஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சிராஜ் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டார்.

ப்ளே ஆஃப்பில் எலிமினேட்டர் ஆட்டம் என்பதால் இறுதிப் போட்டிக்கு ஆர்சிபி அணி செல்ல அனைத்து தரப்பிலும் சிறப்பான பங்களிப்பு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்றைய ஆட்டத்திலும் சிராஜின் பந்துவீச்சை ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் வெளுத்து வாங்கினர். 2 ஓவர்களை மட்டுமே வீசிய சிராஜ் 31 ரன்களை வாரி வழங்கினார். இதில் 3 சிக்ஸர்களும் சிராஜ் ஓவரில் விளாசப்பட்டன. 

இந்த சீசன் சிராஜ் செய்த வேண்டாத சாதனை அவருக்கு பெரும் சோதனையாக மாறிவிட்டது. இந்த சீசனில் மட்டும் சிராஜ் பந்துவீச்சில் 31 சிக்ஸர்களை பல்வேறு பேட்ஸ்மேன்கள் நொறுக்கியுள்ளனர். சிராஜ் 15 ஆட்டங்களில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், சராசரி 10 ரன்களாகும்.

இதற்கு அடுத்தார்போல் ஆர்சிபி சுழற்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்கா பந்துவீச்சில் 30 சிக்ஸர்கள் விளாசப்பட்டன. ஆனாலும் ஹசரங்கா இந்த சீசனில் 26 விக்கெட்டுகளைவீழ்த்தி சஹலுக்கு இணையாக வந்துவிட்டது ஆறுதல்தான். 

சஹலைவிட பந்துவீச்சு சராசரியில் ஹசரங்கா 7.54 என்று சிறப்பாக இருப்பதால், ஊதா தொப்பிக்கான போட்டியில் ஹசரங்கா முன்னணியில் இருக்கிறார். இருப்பினும் ராஜஸ்தான் அணிக்கு இறுதிப்போட்டி வாய்ப்பு இருப்பதால், சஹல் ஒருவிக்கெட் கூடுதலாக வீழ்த்தினாலும் ஊதா தொப்பி அவருக்குத்தான் செல்லும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை