லார்ட்ஸில் கபில் தேவ்வின் சாதனையை சமன் செய்த சிராஜ்!

Updated: Tue, Aug 17 2021 15:42 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது.

இந்த இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்சில் அபாரமாக விளையாடிய இந்திய அணி ரன் குவிப்பில் ஈடுபட்டது. இருப்பினும் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் இந்திய அணியை விட 27 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்சில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்த வேளையில் ஷமி மற்றும் பும்ரா ஆகியோரது சிறப்பான பேட்டிங்கால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 298 ரன்கள் குவித்தது.

அதன் பின்னர் 2வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 120 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் காரணமாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான சிராஜ் கபில் தேவின் 39 ஆண்டு கால சாதனையை சமன் செய்துள்ளார்.

அதன்படி அந்த சாதனை யாதெனில் 1982ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் கபில்தேவ் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதே அந்த மைதானத்தில் ஒரு இந்திய வீரரால் டெஸ்ட் போட்டியில் வீழ்த்தப்பட்ட அதிகபட்ச விக்கெட்டுக்களாக இருந்தது. இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய சிராஜ் தனது முதலாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

ஆக மொத்தம் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய சிராஜ், கபில் தேவின் 39 ஆண்டுகால சாதனையை சமன் செய்துள்ளார். இவரின் இந்த சாதனைக்காக பாராட்டுக்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை