மனைவியின் பிறந்தநாளில் இது நடந்தது மகிழ்ச்சி - சூர்யகுமார் யாதவ்!

Updated: Thu, Nov 18 2021 14:18 IST
Sky is not the limit, it's benchmark: Suryakumar Yadav (Image Source: Google)

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி இந்த தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது. 

நேற்றைய போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் குவிக்க அடுத்ததாக விளையாடிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் 165 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணியானது 19.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி வெற்றிபெற்றது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் 40 பந்துகளை சந்தித்த நிலையில் 6 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 62 ரன்கள் அடித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக ஆட்ட நாயகன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

பின்னர் தனது இந்த சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய சூர்யகுமார் யாதவ், “நான் கடந்த மூன்று நான்கு வருடங்களாக எதை செய்து வருகிறேனோ அதையே தான் இந்த போட்டியிலும் செய்தேன். பேட்டிங்கில் வேற எந்த மாற்றத்தையும் நான் இந்த போட்டியில் செயல்படுத்தவில்லை. வலைப்பயிற்சியின் போது எனது குறைகளை கண்டறிந்து அழுத்தங்களை குறைக்க பயிற்சி எடுப்பேன்.

Also Read: T20 World Cup 2021

இந்த போட்டியிலும் எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளேன். இந்த போட்டியின் இரண்டாவது பாதியில் பனிப்பொழிவு இருந்ததால் பந்து நன்றாக பேட்டுக்கு வந்தது. மேலும் பந்து சற்று மெதுவாக வந்ததால் சிறப்பாக விளையாட முடிந்தது. இறுதியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி. இன்று எனது மனைவியின் பிறந்த நாள். இந்த நாளில் நான் சிறப்பாக விளையாடியதும் ஆட்டநாயகன் விருது கிடைத்ததும் மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை