SL vs AUS, 2nd Test: ஸ்மித், லபுஷாக்னே அதிரடி சதம்; வலிமையான நிலையில் ஆஸி!
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி இலக்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது.
இதில் முதல் டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரடண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்று கலேவில் தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்யத்தீர்மானித்து களமிறங்கியது. இதில் டேவிட் வார்னர் 5 ரன்னிலும், உஸ்மான் கவாஜா 37 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியனுக்குத் திரும்பினர்.
பின்னர் ஜோடி சேர்ந்த மார்னஸ் லபுஷாக்னே - ஸ்டீவ் ஸ்மித் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்னஸ் லபுஷாக்னே சதம் விளாசி அசத்தினார். மேலும் சமீப காலமாக ஃபார்மில் இல்லாமல் தவித்து வந்த ஸ்டீவ் ஸ்மித் இன்று தனது 28ஆவது சர்வதேச டெஸ்ட் சதத்தை பதிவுசெய்து அசத்தினார்.
இதற்கிடையில் மார்னஸ் லபுஷாக்னே 104 ரன்களிலும், ட்ராவிஸ் ஹெட் 12, கேமரூன் க்ரீன் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்களை எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டீவ் ஸ்மித் 109 ரன்களுடனும், அலெக்ஸ் கேரி 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.