இலங்கை vs வங்கதேசம், இரண்டாவது டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!

Updated: Sat, Jul 12 2025 19:41 IST
Image Source: Google

Sri Lanka vs Bangladesh 2nd T20I Dream11 Prediction: இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை தம்புளாவில் உள்ள ரங்கிரி தம்புளா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இலங்கை அணி ஏற்கெனவே முதல் டி20 போட்டியில் வெற்றிபெற்ற உத்வேகத்துடன், வங்கதேச அணி இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடனும் விளையாடவுள்ளனர். மேலும் இரு அணிகளிலும் அதிரடி பேட்டர்களும், அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களும் இடம்பிடித்துள்ளனர். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

SL vs BAN 2nd T20I Match Details

  • மோதும் அணிகள் - இலங்கை vs வங்கதேசம்
  • இடம் - ரங்கிரி தம்புளா சர்வதேச கிரிக்கெட் மைதானம், தம்புளா
  • நேரம்- ஜூன் 10, இரவு 7 மணி (இந்திய நேரப்படி)

Rangiri Dambulla International Stadium, Dambulla Pitch Report

இலங்கை மற்றும் வங்கதேசம் இடையேயான இப்போட்டி தம்புளாவில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை மொத்தம் 26 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 11 முறையும், முதலில் பந்துவீசிய அணி 15 முறையும் வெற்றிபெற்றுள்ளன. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 142 ரன்களாக உள்ள நிலையில் இங்கு அதிகபட்சமாக 209 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

SL vs BAN T20I Head To Head Record

  • Total Matches: 18
  • Sri Lanka: 12
  • Bangladesh: 6
  • No Result: 0

SL vs BAN 2nd T20I Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (கேப்டன்)
  • பேட்ஸ்மேன்கள் - தௌஹீத் ஹிர்டாய், பதும் நிஷங்க, பர்வேஸ் ஹொசைன் எமன்
  • ஆல்-ரவுண்டர்கள் - தசுன் ஷனகா, ரிஷாத் ஹொசைன், மெஹ்தி ஹசன் மிராஸ் (துணை கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள் - ஜெஃப்ரி வான்டர்சே, நுவான் துஷார, மகேஷ் தீக்ஷனா.

SL vs BAN Predicted Playing 11

Sri Lanka Probable XI : பாத்தும் நிஷங்க, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, அவிஷ்க ஃபெர்னாண்டோ, சரித் அசலங்கா (கேப்டன்), தசுன் ஷனக, சாமிக்க கருணாரத்ன, மகேஷ் தீக்ஷன, ஜெஃப்ரி வன்டர்சே, பினுர ஃபெர்னாண்டோ, நுவான் துஷார.

Bangladesh Probable XI : பர்வேஸ் ஹொசைன் எமன், தன்ஸித் ஹசன், லிட்டன் தாஸ் (கேப்டன்), முகமது நைம், தௌஹித் ஹிரிடோய், மெஹ்தி ஹசன் மிராஸ், ஷமிம் ஹொசைன், முகமது சைபுதீன், ரிஷாத் ஹொசைன், தஞ்சிம் ஹசன் சாகிப், தஸ்கின் அகமது.

SL vs BAN 2nd T20I Dream11 Prediction, SL vs BAN Dream11 Team, SL vs BAN T20I Series, Fantasy Cricket Tips, SL vs BAN Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Sri Lanka vs Bangladesh

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை