இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி அணி தற்போது டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகலுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் 16ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 95.2 ஓவர்களில் 312 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

Advertisement

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 101 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. இதையடுத்து 6-வது விக்கெட்டுக்கு சௌத் ஷகீலும், ஆஹா சல்மானும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இறுதியில் பாகிஸ்தான் அணி 121.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 461 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

Advertisement

பாகிஸ்தான் தரப்பில் சௌத் ஷகீல் 208 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதையடுத்து 149 ரன்கள் பின்னிலையுடன் இலங்கை அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. பாகிஸ்தான் அணியின் சிறப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

தனஞ்செயா மற்றும் மெண்டீஸ், நிசான் ஆகியோரின் ஆட்டத்தால் இலங்கை அணி 2-வது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் பாகிஸ்தான் அணிக்கு 131 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அகமது, நௌமன் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷஃபிக் - இமாம் உல் ஹக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அப்துல்லா ஷஃபிக் 8 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஷான் மசூத் 7 ரன்களுக்கும், நௌமன் அலி ரன்கள் ஏதுமின்றியும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

பின்னர் இமாம் உல் ஹக்குடன் இணைந்த கேப்டன் பாபர் ஆசம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. இதன்முலம் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 48 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் இமாம் உல் ஹக் 25 ரன்களுடனும், பாபர் ஆசாம் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதையடுத்து 83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நாளை பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது.    

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News