இலங்கை - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது.
Advertisement
அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் சண்டிமல் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த அவிஷ்கா ஃபெர்னாண்டோ - பனுகா ரஜபக்ஷ இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
Advertisement
பின் ராஜபக்க்ஷ 20 ரன்களிலும், ஃபெர்னாண்டோ 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் இலங்கை அணி தடுமாறியது.
இதனால் 18.1 ஓவர்களிலேயே இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்களை மட்டுமே எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஐடன் மார்கரம், தப்ரைஸ் ஷம்ஸி தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.