SL vs WI, 2nd Test: வெஸ்ட் இண்டீஸ் 253 ரன்களில் ஆல்அவுட்; இலங்கை தடுமாற்றம்!

Updated: Wed, Dec 01 2021 17:32 IST
Image Source: Google

இலங்கை- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் காலே மைதானத்தில் கடந்த 29ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

முதல்நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 34.4 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்திருந்தது, நேற்று தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 204 ரன்னில் ஆல்அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் வீராசாமி பெருமாள் 5 விக்கெட்டும், வாரிகன் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2ஆவது நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 1 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்திருந்தது. 

அதன்பின் இன்று 3ஆவது ஆட்டம் தொடங்கியது. தொடக்க வீரர் பிராத்வைட் சிறப்பாக விளையாடி 72 ரன்கள் சேர்த்தார். கைல் மேயர்ஸ் ஆட்டமிழக்காமல் 36 ரன்கள் எடுத்தாலும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 253 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. 

இலங்கை அணி தரப்பில் ரமேஷ் மெண்டிஸ் 6 விக்கெட் சாய்த்தார். இதன் மூலம் 49 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை 2ஆவது இன்னிங்சில் களமிறங்கியது. 

இதில் கேப்டன் கருணரத்னே 6 ரன்களிலும், ஒஷாதா ஃபெர்னாண்டோ 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 46 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

இலங்கை அணி தரப்பில் பதும் நிஷங்கா 21 ரன்களுடனும், சரித் அசலங்கா 4 ரன்களுடனும் நாளை நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை