மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்பான்சராக ஸ்லைஸ் ஒப்பந்தம்!

Updated: Thu, Jan 20 2022 16:45 IST
Slice becomes principal sponsor for Mumbai Indians (Image Source: Google)

ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிக்கரமான அணியாகவும், லாபகரமான அணியாகவும் செயல்படுவது மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தான்.

இந்த இரு அணிகளுக்கும் உலகம் முழுவதும் பல்வேறு ரசிகர்கள் உள்ளதால், இந்த அணிக்கு ஸ்பான்சர் செய்ய நிறுவனங்கள் போட்டி போடும்.

இதனால் சென்னை அணியின், மும்பை அணியின் மதிப்பே சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவுக்கு உள்ளது. ஒவ்வொரு அணியும் அணிந்திருக்கிற ஜெர்சியில் உள்ள நிறுவனங்களின் லோகா மூலமே பல கோடி ரூபாய் கிடைக்கும். இந்த நிலையில், மும்பை அணிக்கு புதிய ஸ்பான்சர் கிடைத்துள்ளது.

மும்பை அணியின் ஸ்பான்சராக டி.ஹச்.எல். நிறுவனம், வீடியோகான் நிறுவனம் இருந்த வந்த நிலையில் தற்போது கூல் டிரிங்ஸ் நிறுவனமான ஸ்லைஸ் ஒப்பந்தமாகியுள்ளது. இதற்கு அந்த நிறுவனம் மும்பை இந்தியன்ஸ்க்கு 90 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. மும்பை அணியின் ஜெர்சி நிறம் நீலம். இந்த நிறத்தை மாற்றி ஆரஞ்ச் நிறத்தில் வைக்க அந்த நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது

எனினும் இந்த கோரிக்கையை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் நிராகரித்துள்ளதாக தெரிகிறது. இந்திய அணியை குறிக்கும் விதமாக நீல நிறத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜெர்சி தயாரிக்கப்பட்டது. இதனால் இதை மாற்றும் எண்ணமில்லை என்றும், வேண்டும் என்றால் ஜெர்சியின் டிசைனை மாற்றி கொள்ளலாம் என்று மும்பை அணி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.

இனி ஸ்லைஸ் நிறுவன விளம்பரத்தில் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் அதிகம் இடம்பெறுவார்கள். இந்த நிலையில், ஐ.பி.எல். மெகா ஏலத்துக்காக மும்பை அணி, சீரியசாக தயாராகி வருகின்றனர். எந்த வீரர்களை குறிவைக்கலாம். இருக்கும் பணத்தை வைதது எப்படி ஏலத்தில் வீரர்களை தேர்வு செய்யலாம் என்ற யுத்திகளை ரகசியமாக வகுத்து வருகிறார்கள்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை