சையித் முஷ்டாக் அலி தொடரில் இன்று நடைபெற்ற 2ஆவது காலிறுதிச்சுற்று போட்டியில் கர்நாடகா - பெங்கால் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற பெங்கால் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

Advertisement

இதையடுத்து களமிறங்கிய கர்நாடக அணி கருண் நாயரின் அதிரடியினால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கருண் நாயர் 55 ரன்களைச் சேர்த்தார். 

Advertisement

அதன்பின் இலக்கை துரத்திய பெங்கால் அணி விருத்திக் சாட்டர்ஜி, ஷபாஷ் அஹ்மத் ஆகியோரின் அதிரடியாக 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களைச் சேர்த்தது. இதனால் இப்போட்டி டிராவில் முடிந்து, சூப்பர் ஓவருக்கு சென்றது. 

சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த பெங்கால் அணியால் 5 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. அதனைத் எதிர்கொண்ட கர்நாடகா அணியின் கேப்டன் மனீஷ் பாண்டே சிக்சர் விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிந்ததார். 

Also Read: T20 World Cup 2021

இதன்மூலம் கர்நாடக அணி சூப்பர் ஓவர் முறையில் பெங்கால் அணியை வீழ்த்தி, சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News